பெண்களின் பாதுகாப்பான நகரம் சென்னை - முதல்வர் பழனிசாமி பேச்சு

பெண்களின் பாதுகாப்பான நகரம் சென்னை - முதல்வர்  பழனிசாமி பேச்சு
X
பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை உள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நட்ராஜை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார் அப்போது பேசியதாவது;

தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிச் சென்றவர் ஜெயலலிதா. அரசு செய்து முடித்த திட்டங்களை கூறி நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை உள்ளது.

சென்னையில் அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் குறைந்துள்ளன. சென்னையில் மட்டும் குற்றங்களை தடுக்க 2.5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட மாநிலம் தமிழகம். அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இல்லத்தரசிகளின் சுமையை குறைக்க தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!