பட்டய கணக்கறிஞர்கள் கழகம் சார்பில் அடையாறில் ரத்த தான முகாம்
X
By - C.Pandi, Reporter |26 Sept 2021 9:07 AM IST
இந்திய பட்டய கணக்கறிஞர் கழக தென்னிந்திய மண்டல கவுன்சில் சார்பில், அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் நடந்தது.
அடையாறு மத்திய கைலாஷ், ராஜிவ்காந்தி சாலையில், விஎச்எஸ் மருத்துவமனையில் 'தலசீமியா' நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
அவ்வப்போது அவர்களுக்கு ரத்தம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்காக, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ரத்த தானம் செய்து வருகின்றனர். இந்திய பட்டயக் கணக்கறிஞர் கழக, தென்னிந்திய மண்டல கவுன்சில் சார்பில் அதன் உறுப்பினர்கள், மாணவர்கள் ஆண்டிற்கு இருமுறை ரத்த தானம் செய்து வருகிறார்கள். அக்கழகத்தின், 70ம் ஆண்டை முன்னிட்டு, நடந்த ரத்த தான முகாமை, பட்டயக் கணக்கறிஞர் கழக தலைவர் ஜலபதி தொடங்கி வைத்தார். இதில், 80க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu