மயிலாப்பூர் திமுக வேட்பாளர் சைக்கிளில் வாக்கு சேகரிப்பு

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் சைக்கிளில் வாக்கு சேகரிப்பு
X

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று காலை 7 மணிக்கு லைட் அவுஸ் அருகில் இருந்து சைக்கிளில் சென்று பிரசாரம் செய்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து மக்களை வீடு வீடாக சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், "நீங்கள் எங்கள் வீட்டு பிள்ளை, எங்களுடைய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கே, திமுக வெற்றி பெறுவது உறுதி. இதுவே எங்கள் வாக்குறுதி," என்று உறுதியளித்தனர். அப்போது, அவர், "உங்களுடைய குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். உங்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதே என்னுடைய முதல் பணியாக இருக்கும்," என்று வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!