அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்: ஒபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!

அதிமுக செய்தி தொடர்பாளர்  புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்: ஒபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!
X

புகழேந்தி.

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஒ.பி.எஸ், இ.பி.எஸ்.கூட்டாக அறிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் புகழேந்தி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!