தமிழகத்திற்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு!

தமிழகத்திற்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு!
X

தமிழகம் வந்த கோவிசீல்டு மருந்துகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பிய 3.65 லட்சம் கோவிலீல்டு மருந்துகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசிடமிருந்து 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்திற்கு வந்த தடுப்பூசிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் நோய்தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வ விநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!