சென்னையில் 312 வாகன தணிக்கை சாவடி; 10,000 போலீசார் பாதுகாப்பு

சென்னையில் 312 வாகன தணிக்கை சாவடி; 10,000 போலீசார் பாதுகாப்பு
X

சென்னை பெருநகரில் போலீசார் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பெருநகரில் போலீசார் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியம் இன்றி வெளியே வருபவர்கள் மீது வழக்கு செய்கின்றனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்கிரான் பரவல் காரணமாக கடந்த 6ஆம் தேதி முதல் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்தியுள்ளது.

இதனால் சென்னை பெருநகர காவல் சரகம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்ட ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து ஆயுதப் படையை சேர்ந்த 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை பெருநகர முழுவதும் போலீசார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள அத்தியாவசிய தேவைகள் பணிகளுக்கு மட்டும் செல்வர்களை மட்டும் போலீசார் அனுமதிகின்றனர்.

முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அரசின் உத்தரவை மீறி வெளியே சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு தேர்வாணையம் (UPSC & TNPSC) நடத்தும் தேர்வுகள் மற்ற போட்டித்தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்பவர்கள் காவல்துறையினரிடம் ஹால் டிக்கெட்டை காண்பித்து செல்கின்றனர்.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் முகக்கவசம் அணியாமலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செல்பவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்