புனேவில் இருந்து 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது

புனேவில் இருந்து 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது
X
சென்னை: தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தது.

மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்தது.

இதையடுத்து விமானநிலைய லோடா்கள் விமானத்திலிருந்து 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 785 கிலோ எடையுடைய 25 பாா்சல்களையும் விமானத்திலிருந்து கீழே இறக்கி தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் தடுப்பூசி பாா்சல்களை குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி,சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலக மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனா்.

இன்று காலை ஏற்கனவே ஹைதராபாத்திலிருந்து 1.26 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் தனியாா் கொரியா் விமானத்தில் சென்னை வந்தன. அதன்படி இன்று ஒரே நாளில் தமிழகத்திற்கு 4.26 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் 2 விமானங்களில் சென்னை வந்துள்ளன.இந்த தடுப்பூசிகளை தமிழகம் முழுவதும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil