சென்னையில் மாநகர பேருந்தில் தினமும் லட்சக்கணக்கான பெண்கள் இலவச பயணம்
பைல் படம்
சென்னையில் மாநகர பேருந்தில் வார நாட்களில் சராசரியாக தினமும் 7.5 லட்சம் பேர்களும். ஒருசில நாட்களில் 8 லட்சம் பேரும் பயணிக்கிறார்கள். இலவச பேருந்து பயணத்திட்டம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.
அரசு மாநகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள மாநகர பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணம் செய்து வருகிறார்கள். கூலி வேலைகளுக்கு செல்லக்கூடியவர்கள் மட்டுமின்றி அலுவலகங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பெண்களும் அதிகளவு இந்த சலுகையை பயன்படுத்தி வருகிறார்கள். ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மாநகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்வது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 7.5 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறார்கள்.
பள்ளி மாணவிகள்: பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். 140 மினி பஸ்கள் உள்ளதில் இதுவரை 110 பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. இதேபோல 48 ஏ.சி. பஸ்கள் உள்ள நிலையில் அதில் 24 பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது. மாநகர பேருந்தில் பெண்கள் அதிகளவு பயணம் செய்து வருகிறார்கள். வார நாட்களில் சராசரியாக தினமும் 7.5 லட்சம் பேரும் ஒருசில நாட்களில் 8 லட்சம் பேரும் பயணிக்கிறார்கள். இலவச பயணத்திட்டம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu