மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதி தராமல் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது : காங்கிரஸ் எதிர்க்கும் - கே எஸ் அழகிரி
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார்.
ராகுல் காந்தி அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிகில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது. பின்னர் பேட்டியளித்த கேஎஸ் அழகிரி கூறியதாவது :
அகில காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் அறைகூவல் என்றார்.
இந்தியா என்பது நாடு அல்ல தேசம். ராகுல் காந்திக்கு ஜாதி மதம் என்ற அடையாளம் கிடையாது. இந்தியா என்பது மட்டுமே ராகுல் காந்தியின் அடையாளம் என்றார்.
புதுச்சேரியை பாஜக கைபற்றவில்லை, திருடியுள்ளது என விமர்சித்தார். RSS மக்கள் இயக்கம் என தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில். RSS மக்கள் இயக்கம் அல்ல அது ஒரு தீவிரவாத இயக்கம் என்றார்.
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவு எடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும்
தமிழகத்திடம் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது, மாறாக அனுமதி அளித்தால் காங்கிரஸ் அதனை எதிற்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu