நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம்
பைல் படம்
விடுதலைப் புலிகள் உங்கள் மேல் கோபத்தில் இருக்கிறார்கள் உங்கள் வேலையும் மட்டும் பாருங்கள் என்று சீமானை வைகோ எச்சரித்துள்ளார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைதானது அனைவருக்கும் தெரிந்திருக்கும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இழிவாகப் பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அப்படி என்ன பேசினார் கொலை மிரட்டல் வழக்கு தொடுப்பதற்கு என்றே கேள்வி எழலாம்? அவர் ராஜீவ் காந்தி படுகொலையை உதாரணம் காட்டியதே காரணம். அவர் பேசுகையில், "நீ கருணாநிதியையும் அண்ணாதுரையையும் படிச்சு வளர்ந்தவன். நாங்கள் தலைவர் பிரபாகரனை படிச்சு வளர்ந்த பிள்ளைகள்.
அதாவது ஸ்டாலினுக்கு நேரடி சவாலாகவே விடுத்தார். இதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம். இதனை வெளிப்படையாகவே தமிழ்த்தேசியவாதிகளே கடுமையாக விமர்சித்தனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி பேசுவது முன்னால் இழுத்து வந்த தேரை பின்னோக்கி இழுப்பது போல் அமைகிறது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் எழுவர் விடுதலைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் மறைமுகமாகப் பேசுவது அவர்கள் மீது சந்தேகத்தை எழுப்புகிறது எனவும் குற்றம்சாட்டுகள் எழுந்தது
இது தொடர்பாக பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவருமான வைகோ வைகோ தெரிவித்ததாவது: . பிரபாகரன் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன் கட்சிக்குள் கொண்டுவரும் சதிவேலையை சீமான் செய்கிறார். இதனால் விடுதலைப் புலிகள், சீமான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அதனால் உங்கள் வேலையும் மட்டும் பாருங்கள் என்று வைகோ எச்சரித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu