4 மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

4 மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
X
ஆக்சிசன் தயாரிப்புக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு தற்காலிகமாக திறக்க அனுமதி அளித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பு வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆக்சிசன் உற்பத்திக்காக நான்கு மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஆலையை திறக்கலாம் என அனைத்து கட்சிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!