மதுரவாயலில் ₹ 9 லட்சம் மோசடி செய்த பெண் கைது

மதுரவாயலில் ₹ 9 லட்சம் மோசடி செய்த பெண் கைது
X

மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பெண்.

மதுரவாயலில் ரூ 9 லட்சம் மோசடி செய்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை மதுரவாயல், கணபதி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன்(39), இவர் மதுரவாயல் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், ஆண்டாள் நகரை சேர்ந்த செல்வி(42), என்பவர் அவரது மகனின் படிப்பிற்காக ரூ.3 1/2 லட்சம் பணம் வாங்கினார்.

ஆனால் வாங்கிய பணத்தை இதுவரை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாகவும் அந்தப் பணத்தை திருப்பி வாங்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்து இருந்தார்.

மேலும் செலவி இதே போல் அந்த பகுதியில் உள்ள பல பேரிடம் அரசு ஒதுக்கீடு செய்யும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கி தருவதாகவும், ஏல சீட்டு நடத்தியும் பலரிடம் பணம் பெற்று தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுவரை சுமார் ரூ.9 லட்சம் வரை பணம் மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மதுரவாயல் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த செல்வியை தேடி வந்த நிலையில் நேற்று செல்வியை மதுரவாயல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture