டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்

டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்
X

வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார் அவர்கள்,அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்

மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது

சென்னை,மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை மற்றும் 'ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக்கட்டளை' இணைந்து நடத்தும் "மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்" மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற நாமக்கல் கவிஞர் அவர்களின் வாக்கிற்கிணங்க "காளான் வளர்ப்பு முறைகள்" பற்றி Dr.V.இரகுபதி அவர்கள் பயிற்சி அளிக்கிறார். இந்நிகழ்ச்சி வருகின்ற 16.2.2022 முதல் 18.2.2022 வரை, டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடைபெற உள்ளது.

பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் Dr.A.C.சண்முகம் அவர்கள், தலைவர் ACS.அருண்குமார் அவர்களின், தலைமையில் துணைவேந்தர் Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேல் அவர்கள், கூடுதல் பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்கள், அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்& நமது பல்கலைக்கழகத்தின் இணைப் பதிவாளர் Dr.ந.சு.இராமலிங்கம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார் அவர்கள்,அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்.

மகளிர் குழுத்தலைவி திருமதி N.சுதா, உதவி டீன் திருமதி கீதாலட்சுமி, இணைப் பேராசிரியை திருமதி B.சுகிதா,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி S.அமலி, செல்வி A.கீதா, பேராசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil