தமிழகத்தில் வங்கிகள் வேலை நேரம் குறைப்பு..!

தமிழகத்தில் வங்கிகள் வேலை நேரம் குறைப்பு..!
X

வங்கி கோப்பு படம்.

தமிழகத்தில் செயல்படும் வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளின் வேலை நேரம் மீண்டும் ஒரு வாரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, வரும் ஜூன் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வங்கிகள் செயல்படும் எனவும் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

மேலும் ரொக்க பரிவர்த்தணை, என்.இ.எப்.டி., - ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!