கங்கையம்மன் கோவில் குளத்தை துார்வார கோரிக்கை

கங்கையம்மன் கோவில் குளத்தை துார்வார கோரிக்கை
மதுரவாயல் கோயில் குளம்
மதுரவாயல் கங்கையம்மன் கோவில் குளத்தை துார்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரவாயல், மேட்டுக்குப்பம் கங்கையம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளம் புதர்மண்டி, பொலிவிழந்து காணப்படுகிறது.

தற்போது, கோவில் குளம் புதர்மண்டி, விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், பருவமழை காலத்திற்குள் குளத்தை துார் வாரி ஆழப்படுத்தினால், மழைநீர் சேகரமாகி, சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் உயர வழி வகுக்கும்.எனவே, கங்கையம்மன் கோவில் குளத்தை துார் வார, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story