/* */

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் 5 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
X

பைல் படம்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 1 முதல் 3 வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி , கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On: 30 July 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை