சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

மின்பாதை பராமரிப்பு பணி ( பைல் படம்)

சென்னையில் ஜூலை 15ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் ஜூலை 15ஆம் தேதி வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் 15ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதுரவாயல் பகுதி, எம்.எம்.டி.ஏ காலனி, வரலட்சுமி நகர், கங்கா நகர், கிருஷ்ணா நகர், தனலட்சுமி நகர், ராஜீவ்காந்தி நகர், கணபதி நகர், அய்யப்பன் நகர், பாலமுருகன் நகர், ராஜராஜன் நகர், வானகரம் மேட்டுக்குப்பம் ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!