சென்னைக்கு வரும் பல விமானங்கள் ரத்தாக வாய்ப்பு : அதிகாரிகள் தகவல்

சென்னைக்கு வரும் பல விமானங்கள் ரத்தாக வாய்ப்பு : அதிகாரிகள் தகவல்

சென்னை விமானநிலையம் (பைல் படம்)

சென்னைக்கு நாளை வரவிருக்கும் பல விமானங்கள் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் நாளை அதிகாலையிலிருந்து காலை வரை துபாய் செல்லும் 3 விமானங்களும்,துபாயிலிருந்து சென்னை வரும் 3 விமானங்களும், 6 விமானங்கள் ரத்து.லண்டன் விமானம் பல மணி நேரம் தாமதம் என்று அறிவிப்பு.மேலும் பல விமானங்கள் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் கனமழை காரணமாக நாளை காலை 2.15 மணி,4.25 மணி,8.15 மணி க்கு துபாயிலிருந்து சென்னைக்கு வரும் 3 வெளிநாட்டு விமானங்களும், அதைப்போல் சென்னையிலிருந்து துபாய்க்கு காலை 3.30 மணி, 5.25 மணி, 9.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் 3 விமானங்களும் மொத்த 6 வெளிநாட்டு விமானங்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக எமரேட்ஸ் ஏா்லைன்ஸ், மற்றும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதைப்போல் லண்டனிலிருந்து நாளை காலை 5.35 மணிக்கு சென்னை வந்துவிட்டு, காலை 7.30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும் பிரிடீஷ் ஏா்லைன்ஸ் விமானம்,நாளை காலதாமதமாக சென்னை வந்து விட்டு பிற்பகல் 2 மணிக்கு மேல் சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் என்று அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை விமானநிலைய உயா் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் விமானநிலையத்தில் இன்றிரவு நடக்கவிருப்பதாகவும்,அதில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வரையில் நாளை காலை வரை அனைத்து விமான சேவைகளையுமே நிறுத்தி வைப்பது பற்றியும் ஆலோசனை நடக்கவிருப்பதாக விமானநிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதனால் மேலும் பல விமானங்கள் இன்று நள்ளிரவிலிருந்து நாளை முற்பகல் வரை ரத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஏடிஆா் எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வரை நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story