மதுரவாயல் - துறைமுகம் இடையே இரண்டடுக்கு பறக்கும் சாலை

மதுரவாயல் - துறைமுகம் இடையே இரண்டடுக்கு பறக்கும் சாலை
பைல் படம்
மதுரவாயல் - துறைமுகம் இடையே அமைக்க உள்ள பறக்கும் சாலையை இரண்டு அடுக்காக கட்ட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

மதுரவாயல் - துறைமுகம் இடையே அமைக்க உள்ள பறக்கும் சாலையை இரண்டு அடுக்காக கட்ட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறயுள்ளதாவது:

இந்தியாவில் முதல்முறையாக மதுரவாயல் - துறைமுகம் இடையே இரண்டு அடுக்கு பறக்கும் சாலை அமைப்பதற்கான சாலை திட்டம் அமைய உள்ளது. அணுகுசாலை அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டடு 3 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இரண்டு அடுக்குகளாக அமைய உள்ள சாலையில் முதல் அடுக்கில் வாகனங்கள் இரண்டாம் அடுக்கில் துறைமுகத்திற்கு செல்லும் கன்டெய்னர்கள் செல்லும் வகையில் அமைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story