வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை

வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை
X

மயங்கி விழுந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை.

சென்னையில் வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

சென்னையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை வீட்டின் முன்பு பைக்கில் சென்ற மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்து சாலையில் விழுந்தார்.

அப்போது வீட்டில் பொங்கல் கொண்டாடுவதற்கு தயாராக இருந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை உடனடியாக அங்கு வந்து அந்தப் பெண்ணை பரிசோதித்து ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்கும்படி கூறி ஆம்புலன்சில் அவரை அனுப்பி வைத்தார்.

Tags

Next Story
ai future project