தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி விசிக.,வினர் மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று விசிக சார்பில் மாலை அணிவித்து, தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நமது வாழ்நாள் முழுவதும் இந்த சமூகத்தில் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற வேட்கையோடு முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொண்டு போராடியவர் பெரியார்.
குறிப்பாக இந்திய சமூகத்தில் சாதி என்பது புரையோடி கிடக்கிற ஒரு நோயாக வளர்ந்து கிடக்கிறது. இது மனித சமூகத்தை பேதப்படுத்தி உயர்வு தாழ்வு கற்பித்து ஒழிப்பவனே இழிவுபடுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே இத்தகைய சமூக கட்டமைப்பு இனி தொடரக் கூடாது இது முற்றாக சிதைக்க வேண்டும் என்று பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்கள்.
அம்பேத்கர் அவர்கள் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கின்ற கோட்பாடுகளை எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார் பெண்கள் விடுதலை பெற வேண்டும் உழைக்கின்ற மக்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு போராளி தந்தை பெரியார். சமூகநீதி ஜனநாயகத்தை பாதுகாக்க விடுதலை சிறுத்தைகள் உறுதி உறுதி ஏற்கிறோம்.
இன்று பெரியார் நினைவு நாளை ஒட்டி விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் திமுக தலைமையில் தேர்தலை சந்திப்போம்.
பொதுவாழ்க்கையில் மாறுபட்ட முரண்பட்ட கருத்துக்கள் உண்டு. கட்சி மற்றும் இயக்கம் தலைமைதாங்கி நடத்துபவர்கள் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். பொது நிகழ்வுகளில் செருப்பை தூக்கி காண்பிப்பது நியாயப்படுத்த முடியாது பொதுமக்களும் ஏற்கமாட்டார்கள். அத்தகைய போக்கு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது கண்டனத்துக்குரியது.
அரிரில் நடந்த சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருவதாக தெரிகிறது. மரியாதையாக பேசு என்று சொல்வதற்காக தான் மேடை ஏறினேன். ஆனால் அவர்கள் ஆபாசமாக பேசினார்கள். அவதூறுகளைப் பரப்பும் அவர்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடிய போக்கு தலை தூக்கி இருக்கிறது.
அவதூறு பரப்புபவர்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய வரையறைகளை உருவாக்க வேண்டும். இந்திய மற்றும் மாநில அரசுகள் இது குறித்து சிந்திக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வன்முறையை மற்றும் சமூக பதரதத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu