முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்

முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்
X

சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும்.

60 வயதை கடந்தவர்கள் 86 லட்சம் பேர் உள்ள நிலையில், 41 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசியை செலுத்தியுள்ளதாகவும், முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த குடும்ப உறுப்பினர்கள் விரைவில் அழைத்து வரவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது நிலையில், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் . இந்நிலையில், பெரும்பாலான தொற்றுகள் குடும்ப நிகழ்வுகள் மூலம் வருவதாகவும், குறிப்பாக அரியலூர், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் பணி செய்யும் ரீதியால் தொற்று அதிகரிப்பும், பொழுதுபோக்கு இடங்களாக நாகை, விருதுநகர், போன்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகளவில் பரவுகிறது.

சென்னையில் பணி சார்ந்த நிகழ்ச்சிகள், பொழுதுபோக்குகள் போன்ற காரணங்களால் தொற்று சற்று அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் 60 வயதை கடந்தவர்கள் 86 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், 41.78 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், முதியவர்களுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்த குடும்ப உறுப்பினர்கள் அழைத்து வரவேண்டும். சென்னையில் வீடு தேடி முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும்.

பூஸ்டர் தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது. தற்போது கொரோனா தொற்றில் கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், தொற்றா நோய் குறித்தும் மக்கள் கவனம் செலுத்தும் வகையில், அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்.


Tags

Next Story
why is ai important to the future