பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்; பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்;  பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

பைல் படம்.

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 83வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அவரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து டெல்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

இதைப்போல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story