சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக கரன்சி பறிமுதல் - ஹவாலா பணமா?

சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக கரன்சி பறிமுதல் -  ஹவாலா பணமா?

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.46.13 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; ஹவாலா பணமா என்று விசாரணை நடக்கிறது.

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களில் பெருமளவு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு (DRI) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சாதாரண உடையில் சென்னை விமானநிலையத்திற்கு வந்து தீவிரமாக கண்காணித்தனா்.

சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளில், சந்தேகப்படதக்கவா்களை நிறுத்தி, சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த 2 ஆண் பயணிகளின் உடமைகளை திறந்து பாா்த்து பரிசோதித்தனா். அதனுள் முகத்திற்கு போடும் டால்கம் பவுடா் டப்பாக்கள் இருந்தன. அவற்றை திறந்து பாா்த்தபோது, அதனுள் வெளிநாட்டு பணமான யூரோ கரண்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்தனா்.

இதையடுத்து, 2 பயணிகளிடம் இருந்து ரூ.46.13 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனா். இந்த பணம் கணக்கில் இல்லாத ஹவாலா பணமாக இருக்கலாம் என்று தெரியவந்தது. உடனடியாக இருவரின் பயணத்தையும் ரத்து செய்த அதிகாரிகள், ஹவாலா பணம் கடத்தல் ஆசாமிகள் இருவரையும் கைது செய்து, சென்னையில் உள்ள DRI அலுவலகத்திற்கு கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்துகின்றனா். இந்த பணம் யாருடையது? இந்த பணத்தை துபாயில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து சென்றனா்? என்று தீவிர விசாரணை நடைபெறுகிறது.

Tags

Next Story