வெளிநாட்டில் பதுங்கியிருந்த குற்றவாளி 2 வருடத்துக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டில் பதுங்கியிருந்த குற்றவாளி 2 வருடத்துக்கு  பிறகு சென்னை விமான நிலையத்தில் கைது
X

சென்னை விமானநிலைய காவல் நிலையம் ( பைல் படம்)

வெளிநாட்டில் பதுங்கயிருந்த நாமக்கல்லைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி நாடு திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து கத்தாா் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது நாமக்கல்லை சோ்ந்த ஷெரீப்(36) என்ற பயணியின் பாஸ்போாட்டை சோதித்தனா். இவா் சென்னை போலீசால் கடந்த 2 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி.அவா் மீது வரதட்சனை கொடுமை வழக்கு உள்ளது என்றும் கம்யூட்டரில் வந்தது.

இதையடுத்து பயணி ஷெரீப்பை வெளியே விடாமல்,தனியே வைத்து விசாரணை நடத்தினா்.அவர் மீது 2019 ஆம் ஆண்டில் சென்னை எம்.கே.பி.நகா் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ஆனால் இவா் போலீசிடம் சிக்காமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டாா்.

இதையடுத்து சென்னை மாநகர போலீசாா் 2019 ஆண்டின் ஜுலை மாதம் ஷெரீப்பை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனா்.

அதோடு அனைத்து சா்வதேச விமானநிலையங்களிலும் LOC போட்டு வைத்திருந்தனா்.இதை அறியாத ஷெரீப்,வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து சிக்கிக்கொண்டாா்.

அதன்பின்பு குடியுறிமை அதிகாரிகள் ஷெரீப்பை கைது செய்து,ஒரு அறையில் அடைத்து வைத்தனா்.அதோடு சென்னை மாநகர போலீசுக்கும் தகவல் கொடுத்தனா்.சென்னை மாநகர போலீசாா் விமானநிலையம் வந்து ஷெரீப்பை அழைத்து சென்றனா்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!