தாய் திட்டியதால் இளம் பெண் தற்கொலை முயற்சி, பதற்றம், பரபரப்பு

தாய் திட்டியதால் இளம் பெண் தற்கொலை முயற்சி, பதற்றம், பரபரப்பு
 பைல் படம்
வீட்டு வேலை செய்யாததைக் கண்டித்ததால், இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போரூர் அருகே காரம்பாக்கம், தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர், சினேகா (20)இவர், மதுராந்தகபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் பணி புரிகிறார்.

வீட்டில் வேலை ஏதும் செய்யவில்லை' என, நேற்று அவரது தாய் திட்டியுள்ளார்.இதனால், மனமுடைந்து சினேகா, வீட்டில் இருந்த கழிப்பறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ரசாயனத்தை எடுத்து குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.

அவரது பெற்றோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story