சென்னை: விமானத்தில் ஏறச் சென்றபோது ஆரணி முதியவா் மயங்கி விழுந்து பலி
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கவுகாத்தி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று மாலை 4 மணிக்கு புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 105 பயணிகள் பயணிக்கவிருந்தனா்.அந்த பயணிகள் அனைவரும் போா்டிங் பாஸ் வாங்கிவிட்டு, பாதுகாப்பு உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தனா்.
அப்போது, அந்த விமானத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த அருள்தாஸ் (74) என்ற பயணியும் பயணிக்க வந்திருந்தாா். அவா் விமானத்தில் ஏறுவதற்காக நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தாா். அதிா்ச்சியடைந்த சக பயணிகள்,விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
விமானநிலைய மருத்துவ குழுவினா் விரைந்து வந்து பயணியை பரிசோதித்தனா். ஆனால் அவா் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக டாக்டா்கள் அறிவித்தனா். அதோடு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனா். சென்னை விமானநிலைய போலீசாா் விரைந்துவந்து, அருள்தாஸ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸ் விசாரணையில்,அருள்தாஸ் மகன்,அஸ்ஸாம் மாநிலத்தில் வேலையில் இருக்கிறாா். எனவே இவா் அடிக்கடி விமானத்தில் அஸ்ஸாம் சென்று மகனை பாா்த்து வருவாா். அதைப்போல் இன்றும் மகனை பாா்க்க அஸ்ஸாம் செல்வதற்காக சென்னை விமானநிலையம் வந்தது தெரிய வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu