4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம்
சென்னை கோடம்பாக்கம் துணைமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
சென்னை கோடம்பாக்கம் துணைமின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு உத்தரவுகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். 25 ஆயிரம் மின் கம்பங்கள் முன்எ ச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் 4000 மின் வாரிய பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நேற்று 71 இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில் 41 இடங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
66 ஆயிரம் விடுகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், 28 ஆயிரம் வீடுகளுக்கு மின் வினியோகம் மீண்டும் வழங்கபட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் மின் வினியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஆட்சியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மின் விநியோகம் கிடைக்க 10 நாட்கள் ஆகும். ஆனால் முதலமைச்சரின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு விரைவாக மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து இடங்களில் மின் வினியோகம் அளிக்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மேட்டூர், திருச்சி அனல்மின் நிலையத்தில் கூடுதலாக உற்பத்தி செய்த மின்சாரத்தை கொண்டு சரி செய்யப்பட்டது. மழைக்காலம் என்பதால் நீர் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2016-17 ஆண்டுகளில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டபோது சரி செய்ய 2 மாதம் கால அவகாசம் ஏற்பட்டது. ஆனால் தற்போது நேற்று ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து இன்று பிற்பகலுக்குள் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
திருச்சியில் ஒரு இடத்தில் விபத்து ஏற்பட்டது. ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் கடந்த காலங்களை போல் பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை. 2700 புகார்களில் நேற்று ஒரே நாளில் 900 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu