சென்னை மாதவரத்தில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் வேகம்

சென்னை மாதவரத்தில், மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் இன்று நடைபெற்றன.

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில், கடந்த 20ம் தேதி முதல், நாளை வரையில் 'மாபெரும் மழைநீர் வடிகால் துாய்மைப்பணி முகாம்' அறிவித்து, அனைத்து மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

அவ்வகையில், சென்னையிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மாதவரம் மண்டலம், வார்டு 26, திருமலை நகர் மேற்கு பிரதான சாலையில், மழைநீர் வழிந்தோடும் வகையில், வண்டல் வடிகட்டி தொட்டியில் (Silt Catch Pit) தூர்வாரும் பணிகள் இன்று நடைபெற்றன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்