உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
X

பைல் படம்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வகையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் எந்த புகாரும் ஏழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்