சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்
X

சென்னையில் அனைத்து நாட்களிலும் இந்து கோயில்கள் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் திருக்கோவில்களை திறக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மண்ணடி ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசையும், அறநிலையத்துறை அமைச்சரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டதோடு பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை

கோவிலை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் கட்சி பாஜக அல்ல, ஆனால் கலைஞர் பராசக்தி படத்தில் வசனம் எழுதி கோவிலை வைத்து அரசியல் செய்து விட்டார். முன்பு மறைந்திருந்து செய்த விஷயத்தை தற்போது நேரடியாகவே இந்த அரசு செய்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் திமுக அமைச்சர்கள் செய்யும் பிரச்சாரத்தில், தியேட்டர்களில், டாஸ்மாக்குகளில் வராதா கொரோனா, இந்த மூன்று நாட்களில் வருமா?

இது அரசு எடுத்த முன்னைடுப்பு அல்ல, திமுகவின் சித்தாந்தத்தை திணிக்கும் முயற்சி. கட்டுப்பாடு போட அரசுக்கு உரிமை உண்டு ஆனால்,

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட நகைகளை உருக்குவது சட்டத்திற்கும், தர்மத்திற்கும் எதிரானது இதற்காக பாஜக நீதிமன்றத்திற்கும் செல்ல உள்ளது

இன்று நடைபெறும் போராட்டத்திற்கு வந்திருப்பவர்கள் சாதாரணமானவர்கள், கோவிலை சுற்றி கடை வைத்திருப்பவர்கள் இதில் பங்கு கொண்டுள்ளனர்.

ஆர்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் ப அண்ணாமலை கூறுகையில்,

இன்னும் 10 நாட்களுக்குள் இந்த முடிவை தளர்த்தி அனைத்து நாட்களிலும் திறக்க திமுக அரசு அனுமதிக்க வேண்டும், அப்படி 10 நாட்களுக்குள் திறக்காவிட்டால் சிறைக்கு செல்ல தயாராக உள்ளோம் என எச்சரித்தார்.

முதல்வரின் துணைவியருக்காக கொடுக்கும் அக்கறையை தமிழக மக்களுக்கும் அறநிலையத்துறை அமைச்சர் கொடுக்க வேண்டும் எனவும் நீங்கள் அறநிலையத்துறை அமைச்சரா? முதல்வரின் கிச்சன் கேபினெட் அமைச்சரா ?

தேவைப்படும்போது மத்திய அரசின் கருத்துகளை ஏற்பதும், தேவைபடாத போது மத்திய அரசின் கருத்துகளை எதிர்ப்பதுமே இந்த அரசின் நிலைபாடாக உள்ளதோடு காரணம் அவர்களுடைய சித்தாந்தத்தை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!