அதிமுக புதிய அவைத்தலைவர் யார்? -லிஸ்ட்டில் இருக்கும் மூத்த நிர்வாகி

பைல் படம்
எம்ஜிஆர் அதிமுக தொடங்கிய போது தலைவர் பதவி என்பது அண்ணாவுக்கு மட்டும்தான் என்று பொதுச்செயலாளர் பதவியை பலம் வாய்ந்த பதவியாக உருவாக்கினார். அவரது காலம் வரை அவர்தான் பொதுச்செயலாளர். அதே போல் ஜெயலலிதா காலம்வரை அவர்தான் பொதுச்செயலாளர்.
அதே நேரம் கட்சியில் அவைத் தலைவர் பதவியும் கவுரவம் மிகுந்த பதவியாக பார்க்கப்படுகிறது. இந்த பதவியில் இதுவரை பாவலர் முத்துசாமி, வள்ளிமுத்து, நாவலர் நெடுஞ்செழியன், பொன்னையன், புலவர் புலமைபித்தன் ஆகியோர் பதவி வகித்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு மதுசூதனனை ஜெயலலிதா அவைத்தலைவராக நியமித்தார். அதன் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக மதுசூதனன்தான் அவைத் தலைவராக இருந்தார்.
எம்ஜிஆர் காலம் முதல் கட்சியின் மூத்த நிர்வாகிகள்தான் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் மூத்த நிர்வாகி ஒருவரை புதிய அவைத்தலைவராக நியமிக்க ஆலோசித்து வருகிறார்கள். தமிழ் மகன்உசேன், பொன்னையன், தனபால், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இவர்களில் யாராவது ஒருவர் அவைத்தலைவராக நியமிக்கப்படுவார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu