அதிமுகவை வளர்க்கும் வேலை அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்

அதிமுகவை வளர்க்கும் வேலை அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்
X

சென்னை பெரியார் நினைவிடத்தில் திருநாவுக்கரசர் எம்பி அஞ்சலி செலுத்தினார்.

அதிமுகவை வளர்க்கும் வேலை அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, பெரியாரின் 48ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் திடலில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் பெரியார் என புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து அவரிடம், மாற்று கட்சியினரை கைது செய்யும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, மோடி இந்திய அளவில் சர்வாதிகாரியாக செயல்படுவதை பா.ஜ.கவினர் மறக்கக்கூடாது. ஸ்டாலின் தலைமையிலான் ஆட்சி அமைத்து சில மாதங்களே ஆகிறது. சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை பழி வாங்கும் நடவடிக்கை என்கின்றனர். சட்டப்படி அவற்றை சந்திக்கலாம் என்றார்.

அதிமுகவின் உள்கட்சி பிரச்சினை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துகள் குறித்த கேள்விக்கு, நான் காங்கிரஸை சேர்ந்தவன். காங்கிரஸை வளர்ப்பதே என் வேலை. அண்ணாமலைக்கு வேண்டுமென்றால் அதிமுகவை வளர்க்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்கலாம். அதற்காக அவர் பாடுபட்டு கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business