கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை பாதிப்பு குறைவு : அமைச்சர் தகவல்
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்
சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் கூறியதாவது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடந்து இருக்கும் காரணத்தால் ஓரளவு மழை நின்றுள்ளது என்றும்,சென்னையில் தேங்கியுள்ள நீரை ராட்சச பாம்புகள் மூலம் அகற்ற பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
சென்னையில் 44 முகாம்க்ல்-2699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இதுவரை 28.64 நபர்கலுக்கு உணவு வழங்கி உள்ளதாகவும்,தமிழகத்தில் 259 முகாம்களில் 14,135பேர் தங்க வைத்து உள்ளோம். என்றும் கூறினார்.
4நாட்கள் மழையை வெகு சாமர்த்தியமாக நமது முதல்வர் கையாண்டுள்ளார் என்றும், 2015ல் 124 பேர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தனர்.ஆனால் இம்முறை 18 பேர் தான் உயிரிழந்தனர்.அதேபோல் 2015இல் 2218 கால்நடை உயிரிழப்பு, இம்முறை 834 கால் நடை இறந்துள்ளது.
கடந்த முறை 31 ஆயிரம் குடிசைகள் சேதம், இம்முறை மழையில்2284 குடிசைக்ள் சேதம் அடனித்துள்ளன. உயிரிழப்பு குறைந்தற்கு முதல்வரின் ஒரு மாத கால உழைப்பு தான் காரணம் என்றும் அவர் கூறினார்..
கொஞ்ச கொஞ்சமாக தண்ணீரை திறந்ததால் ஆற்றை விட்டு தண்ணீர் அதிகளவில் வெளியேறாமல் தடுத்து உள்ளோம்.ஓரிரு நாட்களில் சென்னையை முழுவதும் இயல்பு நிலைக்கு திருப்பி விடுவோம் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பயிர்களை கண்டறிய நமது அமைச்சர்களை நேற்று இரவே அந்த பகுதிகளுக்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளார். இந்த மழையும் எங்களுக்கு ஒரு அனுபவ ரீதியான ஒரு பாடம் தான்.
எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் சேவைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். 33சதவீதம் மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் நாம் இழப்பீடுகள் தருகிறோம்.
பயிர் பாதிப்பு குறித்து அமைச்சர்கள் கணக்கெடுக்கின்றனர், 2015 ல் உள்ள அதிகாரிகளை வைத்தே திறமையாக இம்முறை முதல்வர் செயல்பட்டுள்ளார். மழை நின்ற பின் மத்திய குழு ஆய்வு செய்ய கோரிக்கை வைக்க உள்ளோம்
அடுத்த புயல் வருவதற்கான தகவல் இதுவரை எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை.. அப்படி வந்தால் அதையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu