பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு மாணவர்களுக்காக பிரார்த்தனை செய்த ஆசிரியர்கள்
பள்ளிகள் திறப்பையொட்டி பிரார்த்தனையில் ஈடுபட்ட கொளத்தூர் எவர்வின் பள்ளி ஆசிரியர்கள்
கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நாளை பள்ளி திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்காக ஆசிரியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
உலக அளவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மூடப்பட்டு வந்தநிலையில், நாளை முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 100 சதவீத பள்ளி மாணவ மாணவிகள் அனுமதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. அதன்படி சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் 500 ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பான கல்விக்காக இறைவனை பிரார்த்தித்து உறுதிமொழி ஏற்றனர்.
கொளத்தூர் எவர்வின் பள்ளியின் சிஇஓ மகேஸ்வரி முதல்வர் புருஷோத்தமன் மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஒன்றினைந்து பள்ளி மைதானத்தில் சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் நின்று கொண்டும் மண்டியிட்டும் மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கும் அருகில் உள்ள மற்ற அனைவருக்கும் கொரனோநோய் உள்ளிட்ட எந்த பாதிப்பும் வராமல் காக்க இறைவனை மன்றாடி பிரார்த்தனை செய்தனர்.
20 அடி உயரம் 15 அடி அகலம் கொண்ட பிரமாண்டமான மாணவர்கள் பேனரின் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வில் கொரனோ வைரஸ் நோய் நுழையாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களுக்கு கிருமி நாசினி முக கவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றி மாணவ மாணவிகள் அச்சமின்றி பள்ளிக்கு வரவும் சுறுசுறுப்புடன் இருக்கவும் மாணவர்களை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை ஆசிரியர்கள் எடுத்துக் கொண்டனர்.
பள்ளி மாணவ மாணவிகள் அச்சமின்றி சுறுசுறுப்புடன் வரவேண்டுமென 500 ஆசிரியர்கள் இறைவனை பிரார்த்தித்தனர். தொடரத்து மாணவ மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் குறித்து உறுதிமொழி மேற்கொண்டனர். பள்ளி முதல்வர் புருசோத்தமன் மற்றும் தலைமை நிலைய அதிகாரி மகேஷ்வரி முன்னிலையில் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu