வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும் : போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும் : போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
X

போக்குவரத்து துறை அமைச்சர் ஆர். எஸ்.ராஜகண்ணப்பன் 

பொதுமக்கள் எளிதில் சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் ஆர். எஸ் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் எளிதில் சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நவீனமயமாக்க செயல் திட்டங்கள் உருவாக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் ஆர். எஸ் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் போக்குவரத்து ஆணையர் கட்டுப்பாட்டில் இணை, துணை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றனர். கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக பொதுமக்களுக்கு கணினி மற்றும் இணைய தளம் மூலம் நடைபெற வேண்டிய பணிகள் உரிய நேரத்தில் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த அச்சம் மட்டும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்த நிர்வாகத்தை சீர் செய்யும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து துறையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் தேவையான தகுதி சான்றிதழ் வழங்குதல் ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் வாகனங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகளை மேலும் நவீன மயமாக்கி பொது மக்களுக்கு எளிதில் சுலபமாக கிடைக்கும் போக்குவரத்து துறையில் செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மஞ்சள்முக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகள் களையப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி பொது மக்களுக்கு உடனடியாக கிடைக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இடைத்தரகர்கள் முறைகேடாக செயல்படும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!