பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு : திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு- வைகோ

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு : திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு- வைகோ
X

மதிமுக பொதுச்செயலர் வைகோ

இலங்கை அரசு சீனாவின் பிடிக்குள் இருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை இந்தியா உணர வேண்டும்

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இயக்கம் தொடங்கியதில் இருந்து நான் சிறையில் இல்லாத நாட்களில் வருடந்தோறும் புத்தாண்டு நாளில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசுவது, எனக்கு புத்துணர்ச்சியை தரும். சமூகநீதியை காக்கும் வகையில் தமிழக மக்கள் திமுக வை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்.

இந்தியாவே போற்றும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இதனை இவன்கண் விடல் என்பதன் பொருளுக்கு ஏற்ப முதல்வர் செயலாற்றுகிறார்.அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் மூலம் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கியுள்ளார்.கோவில் நிலம் மீட்பு, தமிழ்தாய் வாழ்த்து என திமுக வின் சாதனை பட்டியல் தொடர்கிறது.ஒன்றிய அரசின் மெத்தன போக்கே நீட் தேர்வால் 16 மாணவர்கள் உயிர் நீத்தனர்.

வேளாண் சட்ட போராட்டத்தில் விவசாயிகளின் எழுச்சியால் மோடி அரசு பணிந்தது. ராஜீவ் காந்தி கொலை குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர், கோவை பகுதியில் ஜவுளி துறையை மேம்படுத்த முதல்வரின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அத்துமீறல், அடக்குமுறைக்கு பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய கூட்டம் நடத்தப்படவில்லை, இதில் மோடி அரசு சூசகமாக ஏமாற்றி தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.நேரு பிரதமராக இருந்த போது ஒருநாள் கூட பாராளுமன்றம் வராமல் இருந்தது இல்லை, ஆனால் மோடி பாராளுமன்றத்தை முழுமையாக புறக்கணிக்கிறார், பாராளுமன்ற ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் வேலையை மோடியும் அமித் ஷா வும் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் பாதகமான செயலை செய்கிறது ஒன்றிய அரசு. இதனை கைவிட வேண்டும்.நீட் தேர்வில் தமிழகத்திற்கு முழுமையாக விலக்கு பெற முடியும்.தமிழகம் வரும் பிரதமர் மோடி க்கு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இலங்கை அரசு சீனாவின் பிடிக்குள் இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக இருக்கும். குஜராத் மீனவர்களுக்கு பிரச்சினை என்றால் மோடி அரசு துடிக்கிறது, ஆனால் தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை என்றால் மௌனம் காக்கிறது. இதற்கான விளைவுகளை மோடி அரசு சந்திக்கும்.பாஜக விற்கு எதிரான வலுவான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தான் எனது கருத்தும். வேறு வழியே இல்லாமல் கடந்த காலத்தில் அதிமுக அரசு கப்பம் கட்டி மோடி அரசின் காலடியில் கிடந்தது, அந்த விசுவாசத்தில் இன்னும் பாஜக வை ஆதரித்து பேசி வருகிறார்கள்.ஆளுநர் அதிகாரத்தை மறுவரையறை செய்ய வேண்டும் என்ற கருத்து சரிதான், துணை வேந்தர் உள்ளிட்ட நியமனங்களை ஆளுநர் அதிகாரத்தில் இருந்து நீக்க வேண்டும்

தமிழக அரசு மத்திய அரசின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் நிமிர்ந்து நிற்கிறது.தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க வேண்டும் என்பது தான் மதிமுக வின் விருப்பம் ஆனால் தற்பொழுது அதற்கான சூழல் இல்லாதது போன்று தெரிகிறது.27 ஆண்டு மதிமுக வரலாற்றில் நான் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைத்தது கூட இல்லை.10.5% இட ஒதுக்கீடு விடயத்தில் திமுக தனது நிலைபாட்டை தெளிவாக விளக்கியுள்ளது அதுதான் எங்கள் நிலைப்பாடும்.நான் சிறைக்கு செல்லும் வாய்ப்பு இருந்தால் சுயசரிதை எழுத முற்படுவேன்.இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர் நலன்களுக்காக என் வாழ்நாள் முழுவதும் போராடுவதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றார் வைகோ.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil