கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் ஆய்வு; நலத்திட்ட உதவிகள்

கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் ஆய்வு; நலத்திட்ட உதவிகள்
X

கொளத்தூர் தொகுதிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் அன்போடு வரவேற்ற காட்சி.

கொளத்தூர் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தடுப்பூசி செலுத்திய பொது மக்களிடம் உரையாற்றினார். பின்பு சென்னை அயனாவரம் ஆண்டர்சன் ரோட்டில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு சிற்றுண்டி உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, துப்புரவு பணியாளர்களுக்கு உணவினை வழங்கினார்.

பெரம்பூர் பேப்பர் மில் சாலை ராஜா கார்டன் குடிசை மாற்று வாரிய அருகில் உள்ள ரேஷன் கடையில் 2000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கினார். இறுதியாக கொளத்தூர் தொகுதியில் உள்ள அவரது சட்டமன்ற அலுவலகத்தில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள், மாஸ்க் மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்