சென்னை பல்லவன் சாலையில் திமுக சார்பில் நல திட்ட உதவிகள் அமைச்சர் சேகர் பாபு வழங்கல்
சென்னை பல்லவன் சாலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி மைதானத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 1700 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பயனாளிகளுக்கு அரசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களையும் 200 ரூபாய் நிதி உதவியையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி கொரோனா காலத்தில் 17மாதங்கள் ஆட்சியில் இல்லாத போதும், ஆட்சியில் உள்ளபோதும் தினக்கூலி வேலைக்கு செல்பவர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் உதவிகள் வழங்குவதை போல் சென்னையிலும் வழங்கப்படுகிறது. இன்று துறைமுகம் தொகுதிகுட்பட்ட எஸ்.எம்.நகர் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 1700நபர்களுக்குஉதவி வழங்கப்பட்டது.
கொரோனா 2ம் அலை இன்னும் முடியாத நிலையில், தமிழ்நாடு முதல்வர் சொல்வதை போல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கவேண்டும்.
5ஆண்டு கோவில்களில் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், திருகோவில் பணியிடங்களை நிரப்பவும் அர்ச்சகர், உதவியாளர், ஓதுபவர், நாதஸ்வர கலைஞர்கள், காவலாளிகள் என காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் ஒளிமறைவு இல்லாமல் நியமிக்க முதல்வர் அவர்கள் உத்தவிரட்டுள்ளார்.
கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் அது குறித்த முடிவினை அறிப்பார்.
அதிக வருமானம் உள்ள கோவில்களை கணக்கெடுத்து வருமானம் குறைவாக உள்ள கோவில்களை அதனுடன் இணைத்து அனைத்து கோவில்களிலும் நிச்சயம் ஒளி பிறக்கும் ஒரு கால பூஜையாவது நிச்சயம் தினமும் நடக்கும்.
தினமும் ஒன்றிரண்டு இடங்களிலாவது கோவில் நிலங்களை மீட்டுள்ளோம், 600கோடி மதிப்பிலான இடங்களை மீட்டுள்ளோம் 100க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம் எனவும் கூறினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் குத்து சண்டையை இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்தோம். இவர் மட்டும் அடிப்பார் எதிரில் உள்ள வீரர் அடிவாங்குவார். இம்மாதிரியான ஜோக்கர் வேலை திமுகவினருக்கு செய்ய தெரியாது என நகைப்புடன் கூறினார்.
விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி அளித்து ஊக்குவித்தவர் முதல்வர் அவர்கள். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போல் பந்து மெதுவாக போடு அடிக்கிறேன் என்பவர் அல்ல தமிழக முதல்வர். வீட்டிலிருந்து தினமும் 30கிமீ சைக்கிளிங் செல்கிறார் முதல்வர். விளையாட்டு துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றுவார் நம் முதல்வர் என நம்பிக்கை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu