/* */

வணிகர்கள் கோரிக்கை ஏற்று 27 மாவட்டங்களில் துணி, நகைக்கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை ஏற்று 27 மாவட்டங்களில் துணி, நகைக்கடைகள் திறக்க முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

வணிகர்கள் கோரிக்கை ஏற்று 27 மாவட்டங்களில் துணி, நகைக்கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

சென்னை: வணிகர்கள் மற்றும் பொதுமக்களி்ன் கோரிக்கையை ஏற்று பிற 23 மாவட்டங்களுக்கும் துணி மற்றும் நகைகடைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு (28/06/2021) இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை வருகிற ஜுலை 5ம் தேதி காலை 6 மணி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின் படி, கொரோனா பாதிப்புக்கு ஏற்ப மாவட்டங்கள் மூன்று முறையில் வகைப்படுத்துள்ளது. அதன்படி வகை ஒன்றில் கோயம்புத்துார், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களும், வகை 2 ல் அரியலுார், கடலுார், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலுார், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருவண்ணாமலை, துாத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலுார் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களும்,

வகை 3 ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது. வகை 3 ல் அனைத்துக் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 7மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களி்ன் கோரிக்கையை ஏற்று வகை 2ல் இடம் பெற்ற 23 மாவட்டங்களும் திறக்க மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 29 Jun 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!