/* */

தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்

கொளத்துாரில் தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து மநீம கட்சியினர் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்
X

சென்னை கொளத்துார் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 36 பேர் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் ஜெகதீஷ்குமார் போட்டியிடுகிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16வது இடத்தில் மநீம வேட்பாளர் பெயர் இடம் பெற்று இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து 50க்கும் அதிகமான மநீம கட்சியினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெளியான பட்டியலே இறுதியானது என்று அதிகாரிகள் உறுதிப்பட கூறியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

Updated On: 24 March 2021 2:47 AM GMT

Related News