சென்னையில் மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ விநாயகர் சதுர்த்தி

சென்னையில் மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ விநாயகர் சதுர்த்தி
X

கொளத்து, கென்னடி சதுக்கம் திரு வி க நகர் பகுதியில், மும்மதத்தினர் இணைந்து விநாயகர் சதுர்த்தி பிரசாதங்களை வழங்கினர். 

சென்னை கொளத்தூர் பகுதியில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் பங்கேற்ற, சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு அனைத்து பண்டிகை விழாக்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தடை விதித்துள்ளது. அதே நேரம், வீட்டில் விநாயகர் சிலை வைத்து தனிப்பட்ட முறையில் கொண்டாட தடை ஏதும் இல்லை.

இந்த நிலையில், சென்னையில் மும்மதத்தினரும் இணைந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி, எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கென்னடி சதுக்கம் திரு வி க நகர் பகுதியில், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றாக சேர்ந்து, சகோதரத்துவத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர். பிரசாதங்களை மும்மதத்தினரும் இணைந்து வழங்கினர். இது, பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future