இ- சேவை 2.0 விரைவில் அறிமுகம்: தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
பயிற்சி முகாம் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
இ- சேவை 2.0 விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் விரைவாகவும் எளிமையாகவும் சேவைகள் வழங்க முடியும் என்றார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் .
தகவல் தொழில் நுட்பவியல் துறையின் சார்பில் தமிழக அரசுத்துறை அலுவலர்களும் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. இணையவழி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்காக தமிழக தொழில்துறை எல்காட் நிறுவனம், TNEGA மற்றும் சி-டாக் நிறுவனம் இணைந்து இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியினை தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: சைபர் செக்யூரிட்டி மிகவும் முக்கியமானது. தரவுகளை பாதுகாப்பதும் முக்கிய அம்சமாக மாறி உள்ளது. சைபர் செக்யூரிட்டி ஆர்க்கிடெக்சர் என்ற கடமைப்பை உருவாக்கி தரவுகளை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், 3000 அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் இணையதளத்தை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற இணையதள முடக்கங்கள் நடைபெறாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த பத்தாண்டுகளாக இ-சேவை மையங்களில் மக்களுக்குத் தேவையான போதிய சேவைகள் இடம்பெறாமல் இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்தபின் புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இ- சேவையில் விரைவில் 2.0 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விரைவாகவும் எளிமையாகவும் சேவைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார் இ சேவை மையம் மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக இ பேமண்ட் வசதி ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர் மனோதங்கராஜ்.
இதில், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி, முதன்மை தகவல் பாதுகாப்பு அலுவலர் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படுகிறது. இதன் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பயிற்சியளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது 100 இணைய வழி பயிற்சிகளையும், 20 அலுவலகம் வகுப்பறை பயிற்சிகளையும் கொண்டதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu