இலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ 4000 வழங்கும் நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு

இலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ 4000 வழங்கும் நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு
X

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, மஸ்தான் பேட்டி அளித்தனர்.

இலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஏ.கே.மஸ்தான் கலந்து கொண்டு நிதி வழங்கினர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை சார்பாக இலங்கை தமிழ் அகதிகள் முகாமிற்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மஸ்தான் கூறியதாவது

தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர்கள் 13, 553 பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு 4000 ரூபாய் வழங்க இருக்கிறோம்.நாளை வெளிநாடு வாழ் தமிழர்கள் முகாம்களுக்கு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அவர்களின் குடியுரிமைக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம்

மத்திய அரசிடமிருந்து தீர்வு கண்ட பிறகுதான் தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முகாம்களில் இருப்பது தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்று இலங்கைத் தமிழர்கள் நினைக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு குடியிரிமை வழங்குவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேசி வருகிறது. என்றும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!