மேக்கே தாட்டு அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை: எடியூரப்பா கடிதம்

மேக்கே தாட்டு அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை: எடியூரப்பா கடிதம்
X

மேக்கே தாட்டு அணை கட்டுவது தமிழகத்தைப் பாதிக்காது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதியுள்ள கடிதத்தில், மேக்கேதாட்டு அணை கட்டுவது தமிழகத்தைப் பாதிக்காது மக்கள் நலனை கருதி, மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்காது என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், மேக்கே தாட்டு அணை தொடர்பாக ஆலோசனை மேற்கோள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மேக்கே தாட்டு அணை விவகாரம் குறித்து இரு மாநில பிரநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!