சென்னைக்கு 2வது விமானநிலையம் அமைக்கும் பணி: அரசு மீது விமான போக்குவரத்துத்துறை குற்றச்சாட்டு

சென்னைக்கு 2வது விமானநிலையம் அமைக்கும் பணி: அரசு மீது விமான போக்குவரத்துத்துறை குற்றச்சாட்டு
X

பைல் படம்

சென்னைக்கு அருகில் 2வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்து தரவில்லை என்று விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

சென்னைக்கு அருகே 20 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான கோரிக்கையை தமிழக அரசு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான தரவுகளை இறுதி செய்து 2011ம் ஆண்டு தமிழக அரசிடம் வழங்கியதாகவும் ஆனால் நிலத்தை ஒப்படைப்பதற்கான இறுதிக்கட்ட அனுமதியை இன்னும் மாநில அரசு வழங்கவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னைக்கு அருகில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்ந்தெடுக்க மாநில அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதன்படி மாமண்டூர் மற்றும் பரந்துார் ஆகிய இடங்களை 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் பரிந்துரைகளாக மாநில அரசு வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவற்றில் ஒன்றை தமிழக அரசு இறுதி செய்யவில்லை என்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story