கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்

கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்
X
கடலோர மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ( பைல் படம்)
கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

சென்னை : மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்ட முன்வரைவு குறித்து அனைத்து கடலோர மாவட்டங்களை சேர்ந்த முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதன் அடிப்படையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி ஆகிய கடலோர மாநிலங்களை சார்ந்த 9 மாநில முதல்வருக்கு கடிதம் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில்,

ஒன்றிய அரசின் புதிய சட்ட முன்வடிவு மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே ஒன்றிய அரசு கொண்டு வரும் துறைமுக மசோதாவை 9 கடலோர மாநிலங்களும் எதிர்க்க வேண்டும். என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!