தமிழகத்தில் ஆற்றல்மிகு இளைஞர்சக்தி அதிகம் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
புத்தாக்கம் திட்டத்தின் கீழ் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மேற்கூரையுடன் கூடிய சர்க்கர நாற்காலியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் ஆற்றல் மிகு இளைஞர் சக்தி அதிகம் எனவும் மாணவர்கள் கல்வி கற்கும் போது சமூகத்தின் தேவை அறிந்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தின் கீழ் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மேற்கூரையுடன் கூடிய சர்க்கர நாற்காலி, வரிவடிவை ஒலிவடிமாக மாற்றும் மென்பொருள், பாதுகாப்பு குடிநீருக்கான எளிய உபகரணம், மின்னணு குப்பை தொட்டி ( கழிவு கிருமிகளை அழிக்கும் ) நீர் மற்றும் மண் வளம் காக்கும் இயற்கை உரம் உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு , பயனாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாணவர்கள் பொறியியல் கல்வி பயில இடராக இருந்த நுழைவு தேர்வு கலைஞர் ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்டது.அதனால் இன்று அனைத்து வீட்டிலும் ஒரு பொறியியல் பட்டதாரி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எளிய மாணவர்கள் மருத்துவ கல்வி பெற தடையாக உள்ள நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டபோராட்டம் நடத்தி வருகிறோம்.தமிழகத்தில் தான் ஆற்றல் மிகு இளைஞர் சக்தி அதிகம். பள்ளிகள் கல்லூரிகள் ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளது போல் எந்த மாநிலத்திலும் கிடையாது. அது நமக்கு பெருமை. ஆய்வுகள் ஆராய்ச்சிகள் அதிகரிக்க வேண்டும் வெளிநாடுகளில் உள்ள படிப்புகள் இங்கு துவங்கபட வேண்டும்..
மாணவர்கள் தாங்கள் கல்வி கற்கும் போதே சமூகதின் தேவை அறிந்து நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண இது போன்ற திட்டங்கள் உதவும்.கலைஞர் தான் நாட்டிலேயே முதல் முறையாக மாற்று திறனாளிகளுக்கு என தனி துறையை உருவக்கி அந்த துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது நானும் அந்த துறையை எனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன்.சமூக மேம்பாட்டு புத்தாக்க திட்டத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள். கல்வி சிறந்த தமிழ் நாடு எனும் பட்டம் நமக்கு போதாது , உயர் கல்வி ஆராய்சி கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் பட்டம் நமக்கு தேவை. மாணவர்கள் கட்டுப்பட்டுடன் கடமையாற்றினால் வெற்றி நிச்சயம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu