காெளத்தூரில் பாரதியின் நூற்றாண்டு விழா: 4000 வண்ண விளக்குகளால் உருவப்படம்

கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் பாரதியின் 100 வது நினைவு தினத்தையாெட்டி 4,000 வண்ண விளக்குகளால் உருவாக்கப்பட்ட பாரதியின் முழு உருவப்படம்.
கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி குழுமம் சார்பில் மகாகவி பாரதியின் 100 வது நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக பள்ளி குழுமம் சார்பில் 7500 சதுரடி கொண்ட பள்ளியின் மைதானத்தில் சுமார் 4,000 வண்ண விளக்குகளால் பாரதியின் முழு அளவு படத்தை உருவாக்கினர்.
மேலும் 7,500 சதுரஅடி (150 அடி × 50 அடி) பாரதி உடையில் 50 மாணவர்கள் பாரதி வேடமணிந்து அவரின் பொன்னான கவிதை வரிகளை எடுத்து வைத்தனர்.
குறிப்பாக 25 பெண்கள் முகத்தில் பெயிண்ட் மூலம் பாரதியின் முகம் வரைந்து சட்டை அணிந்து பாரதியின் வாழ்க்கையை சித்தரிக்கும் தொடர் பாடல்களை பாடி அசத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாரதியின் வாழ்க்கை வரலாறு அவரின் படைப்புகள் பெண் விடுதலை சமத்துவம் பற்றி அவரின் புரட்சிகர கவிதைகள் அடங்கிய பதாகைகள் மாணவ மாணவியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu