மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை

மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை
X

மூதறிஞர் ராஜாஜி

சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் உள்ள மூதறிஞர் ராஜாஜியின் சிலைக்கு,143 வது பிறந்த நாளையொட்டி அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 143 வது பிறந்த நாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினோம்..

தமிழகம் உள்ள வரை ராஜாஜியின் புகழ் நிலைத்து இருக்கும் மகாத்மா காந்தியின் சீடராக இருந்து , நல்ல நிர்வாக திறன் படைத்தவர் ராஜாஜி என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என்றார்.

விடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களுக்கு அரங்கம் அமைப்பது, சிலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!